Monday, July 6, 2009

திருப்பூரில் தினமலர் செய்த தில்லாலங்கடி!





திருப்பூரில் கடந்த 5ம் தேதி பத்திரிகையாளர்கள் சங்கம்சார்பில், மாநகராட்சி மேயர் (திமுக) செல்வராஜைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
தினமலர் நிருபர் இளங்கோவன், போட்டோகிராபர்கோபால் ஆகியோரைத் தகாத வார்த்தையில் திட்டி, தாக்க முற்பட்டதாகவும் (தாக்கியதாகவும் சொல்கிறார்கள்) மேயர்செல்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகர மன்றக் கட்டட பூமி பூஜையின் போது இந்தச் சம்பவம்நடந்துள்ளது. சம்பவத்துக்கு முதல் நாள் மாநகராட்சி பட்ஜெட் கூட்ட முடிவில் (இரவு விருந்துக்குப் பின்) கவுன்சிலர்களுக்குஅன்பளிப்பாக சூட்கேஸ்கள் வழங்கப்பட்டதாம்.அதுபற்றி தினமலரில் வெளியான செய்தியில், 'கவுன்சிலருக்கு நள்ளிரவில்சூட்கேஸ் வழங்கிய மர்மம்' என்று எழுதியிருந்தார்களாம். அதில்கடுப்பான அனைத்துக் கட்சிக் கவுன்சிலர்களும், மேயரை ஏற்றிவிடமேயரும் அங்கு வந்த கோபாலின் காமிராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டு(அலுவலகத்துக்குச் சொந்தமானது) சகட்டு மேனிக்கு அவரைத் திட்டியிருக்கிறார்.விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அந்தச் செய்தியை எழுதிய நிருபர் இளங்கோவனை இங்கே எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்.சமாதானம் பேச வந்த (வேறு பத்திரிகை) நிருபர்களையும் ஏக வசனத்தில் திட்டித் தீர்த்திருக்கிறார்.
இதற்காக கொதித்தெழுந்த சொரணை உள்ள மற்ற பத்திரிகையாளர்கள்உடனடியாக பத்திரிகையாளர்கள் சங்கத்தில் மேயருக்கு எதிராக தீர்மானம் போட்டக் கையோடு,ஞாயிற்றுக் கிழமையன்று மாநகராட்சிக் கட்டடம் முன்பு மேயரைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.தினமலர் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் திருப்பூர் தினமலர் ஊழியர்கள் எல்லோரும் கலந்திருப்பார்கள்என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.இங்குதான் தினமலரின் தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிருக்கிறது.
'தினமலர்நிருபர், போட்டோகிராபரைத் தாக்கிய மேயரைக் கண்டிக்கிறோம்' என்றுபத்திரிகையாளர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்க, மேயரால் தாக்கப்பட்டதாக,கூறப்படும் நிருபர் இளங்கோவன் (அலுவலக வேலையாம்!), போட்டோகிராபர்கோபால் (விசாரணைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டார்) ஆகிய இருவரும் அந்தஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 'தங்களைத் தாக்கியதற்காகத்தானேஇந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என்கிற எண்ணமே இல்லாமல் அந்தஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள், தினமலர் ஊழியர்கள்.
அதே ஆர்ப்பாட்டத்திற்கு தினமலரில் இருந்து ஒரு நிருபரும். போட்டோகிராபரும் ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்க வந்திருந்தார்களாம் (!).

கோவை பதிப்பு தினமலரில்வெளியான ஆர்ப்பாட்டம் செய்யும் போட்டோவில் தினமலர் நிருபர்கள்மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதே இதற்கு சாட்சி. அதையும்வெட்கமே இல்லாமல் பிரசுரிக்க 'ஒரு கட்ஸ்' வேணும் இல்லையா?"ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று பாஸ் சொல்லிவிட்டார்;மீறி யாராவது கலந்து கொண்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் கலந்துகொள்கிறீர்களா, இல்லையா என்பதை அறிய, சிலர் (தினமலர்ஏஜெண்ட்கள் ) மூலம் ரகசியமாக அமர்த்தி உங்களை கண்காணிப்போம்" என்று திருப்பூர் தினமலர் சப்-எடிட்டர் நிருபர்களை மிரட்டியிருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், திருப்பூர் தினமலர் நிருபர் ஒருவர், சக நிருபர்தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுநாளே விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில்பதுங்கிக் கொண்டார்.

தங்கள் ஊழியர் தாக்கப்பட்டதை அறிந்து நியாயமாக கொதித்து எழுந்திருக்கவேண்டிய தினமலர் நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில்தங்கள் (அதுவும் விவகாரத்துக்குக் காரணமான) நிருபர்களைக் கூட கலந்துகொள்ளக் கூடாது என்று தடை போட என்ன காரணம்?ஊரில் கொழுத்தவனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற வழக்கமானதினமலரின் போக்குதான் இந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறது.
மக்கள் பிரச்சினைக்காக யாராவது தெருவில் இறங்கிப் போராடினால் அதைக் கொச்சைப் படுத்துவதும், அவர்களை ஏகத்துக்கு நையாண்டி செய்வதும் தினமலரின் வழக்கம்.
இப்போது தங்களை நம்பி உள்ள ஊழியர்களுக்குநேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்கும் போராட்டத்தைக் கூட புறக்கணிப்பதில்தினமலரின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.தேசிய நடுநிலை நாளேடு தினமலர், 'தவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்போம்'என்று சொல்வதெல்லாம் 'சும்மா'. தன் ஊழியர்கள் மீது நடந்த வன்முறையைக்கூடதட்டிக் கேட்க முன் வரவில்லை. தங்கள் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துகாவல் துறையில், நீதிமன்றத்தில் தினமலர் புகார் செய்யலாம். ஆனால்ஜனநாயக முறையில் அதை எதிர்க்கத் துணிந்த சில பத்திரிகையாளர்களின் போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இனி என்ன செய்தாலும் அதில் என்ன நியாயம் இருக்கும்?
மாநகராட்சி கொடுக்கும் விளம்பரங்களால் 'பவுன்ஸ்' ஆகாத செக் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தினமலர், மேயரைப் பகைத்துக் கொள்ள விரும்பாது. சுயநலமே முக்கியம்; தன் ஊழியர்களின்நலனைப் பற்றி தினமலர் கவலைப்படப் போவதில்லை.தெருவுக்கு இறங்கிப் போராடுவதை வழக்கமாக கொச்சைப்படுத்தும் தினமலர்,தங்கள் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் போன்றவர்களை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே இதன் மூலம் புரிந்திருக்கும்.தினமலர் ஊழியர்களுக்கும் இந்த உண்மை புரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் வெளிப்படையாக அவர்கள் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. தினமலர்நிருபர்கள் யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது என்பதால் இதைப் படிப்பவர்கள் யாராவதுஉங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதை ·பார்வேர்டு செய்யவும்.
நன்றி




4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தினமலர் பற்றிய உண்மை ஊருக்கே தெரிந்தது தான். இயக்குநர்கள் சீமான், பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரின் போராட்டத்தை கொச்சைப் படுத்தியது தினமலர். தன்னுடைய ஊழியர்கள் மட்டுமல்ல பெண்டாட்டியைக் கூட யாராவது கையைப் பிடித்து இழுத்தால் வம்பெதற்கு என்று அமைதியாகப் போய் விடுவார்கள் இந்த தினமலர்க்காரர்கள். ஆனால் அமைதியாக இருந்து முதுகில் குத்துவதும் கால்களை இழுத்து விடுவதுமாக சைலண்ட்டாக பழி தீர்த்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  3. தினமலரைப் புறக்கணித்தால் தான் தமிழன் உருப்படுவான். தினமலர் தமிழனின் இறையாண்மைக்கு எதிரானது!

    ReplyDelete
  4. paarpan yeppoluthum paarpan-periyar.yelavu papaerukku,thina malaththukku ithuvum oru uthaaranam.

    ReplyDelete