Thursday, October 1, 2009

இலங்கை தூதர் அளித்த விருந்தில் மானங்கெட்ட சென்னை பத்திரிகையாளர்கள்....


தென்னிந்தியாவுக்காக இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இன்று (1.10.09) பிற்பகல் மூன்று மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், பங்கேற்ற பத்திரிகையாளரும் எனது நண்பருமான ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை உங்களிடம் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவே இந்த சந்திப்புக்கு தூதரகம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள தூதரக அலுவலகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்துவிட்டனர். இரு பெண்கள், மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் கிருஷ்ணமூர்த்தி பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார்.
முதலில் பத்திரிகையாளர்களுடனான தன்னுடைய நல்லுறவு நீடூழி வாழ வேண்டும் என்று சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கேட்டுக்கொண்டாராம்.

இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் பல்வேறு பத்திரிகை செய்திகளைத் தொடர்ந்து, இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டறிந்தேன். அதில் இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவை கெடுக்கவே சிலர் திட்டமிட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக செய்திகளைப் பரப்புகின்றனர். பத்திரிகைகளும் ஆதாரமற்ற செய்திகளை பிரசுரிக்கின்றன என்றாராம். (மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டார்களா?) .


இலங்கை கடற்படையினர் யாரும் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லையாம். யாரையும் தாக்கவில்லையாம். ( இன்னும்மா இந்த ஊரு இவனுகள நம்பிக்கிட்டு இருக்கு..)

கச்சத் தீவில் உள்ள அந்தோனியர் கோவிலுக்குப்போகவும் மீன் வலைகளை உலர்த்தவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? என்று நிருபர்கள் கேட்க.. அதுபற்றி உங்கள் அரசிடம் கேளுங்கள் என்றாராம் திமிருடன்.. எங்கள் அரசு இருக்கிறது என்கிறது.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று திரும்ப நிருபர்கள் கேட்க அவனிடம் பதில்லை.. (செருப்பால் அடிக்கணும் ).

இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விட (நானூற்றி சொற்பம்) இலங்கை சிறையில் இருக்கும் (நூற்றி இருபது பேராம்) இந்திய மீனவர்களின் எண்ணிக்கைக் குறைவு என்றெல்லாம் பேசியிருக்கிறார். (இந்த எண்ணிக்கையை சமன் செய்யத்தான் இப்படி ரத்தவெறியோட ஆடுகின்றனவா இந்த சிங்கள நாய்கள்?)

அத்துமீறி வரும் மீனவர்களையும் பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் நடத்துகிறார்களாம். அப்படியென்றால் மீனவர்கள் தாங்களே தங்கள் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக கரைக்குத் திரும்பினார்களா என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
நிருபர்கள் இடையில் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மாறாக டென்ஷனில் அவரது கைகள் நடுங்கின. தொடர்ந்து பேசமுடியாமல் வார்த்தைகள் தட்டுத் தடுமாறின.
இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய எங்களை அங்கு அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று நிருபர்கள் கேட்டதும், இறையாண்மை உள்ள இலங்கை நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் அதிபராக மகிந்த ராஜபக்சே உள்ளார். அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி ஆட்சி செய்கிறார். உண்மை இப்படியிருக்கையில் நீங்கள் அங்கு வந்து பார்க்க அது என்ன மிருகக் காட்சி சாலையா? என்று கேட்டாராம்.
இதை அப்படியே தமிழில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் கேட்க அப்படியே மொழிபெயர்த்தார். தொடர்ந்து பத்திரிகை யாளர்கள் இதையே தொடர்ந்து கேட்க, வேறு வழியின்றி உங்கள் நிறுவனம் மூலமாக கடிதம் கொடுங்கள் எங்களை எங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து பதில் சொல்கிறேன்.. என்று ஒரே போடாகப் போட்டாராம்.
ரஜினி விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றதாக அவதூறு பரப்பிய உங்கள் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டதும், இதையேன் என்னிடம் கேட்கறீர்கள்.. அந்த அமைச்சரிடமே கேளுங்கள் என்றாராம். (அப்புறம் என்னக் கூ....க்கு அவன் பிரஸ்மீட் வைத்தான் என்று கேட்காதீர்கள்)
தொடர்ந்து நிருபர்களை கேள்வி கேட்க விடாமல் பேசிக் கொண்டே இருந்தார் வ.கிருஷ்ணமூர்த்தி. அப்போது என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.. வேலை நிமித்தமாக இருக்க வேண்டும் என்பதில்லை.. சாதாரணமாகவே என்னிடம் பேசுங்கள் நான் எப்போதும் உங்களிடம் பேச ஆர்வமாக இருக்கிறேன் என்று போட்டாரே ஒரு பிட்டு.. (அம்சா இடத்தைப் பிடித்துவிட்டார். இதற்காகத் தானே நம் பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.)

ஒரு வழியாக நிருபர்கள் சந்திப்பை முடித்துக் கொள்வதாக அறிவித்த அவரிடம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று எப்போது அதிகாரப் பூர்வமாக அறிவிப்பீர்கள் என்று கேட்டார் ஒரு நிருபர்..(அவர் தான் அதிகக் கேள்விகளைக் கேட்ட நிருபர்)...
உடனே தன் அருகில் இருந்த தூதரக அலுவலர்களிடம் ஏதோ கிசுகிசுத்தாராம். அதைப் பார்த்து நிருபர்கள் சிரித்துவிட்டார்களாம். அடுத்து, சில வினாடிகளுக்குப் பின் நிருபர்களைப் பார்த்து என்னைப் பொறுத்த வரையில், அவர் உயிருடன் இல்லை என்று பதிலளித்தார்.

இப்படி படுசூடாக போன இந்த சந்திப்பு முடிந்ததும், எனது நண்பரும் அவரது போட்டோகிராபரும் அந்த அறையில் இருந்து வெளியே வர, அங்கே மிகப்பெரிய விருந்துக்கு உண்டான ஏற்பாடுகள் இருந்ததாம். நண்பரும் போட்டோகிராபரும் வெளியே வந்து ஐந்து நிமிடங்கள் வரை காத்திருந்தும் எந்த நிருபரும் வெளியே வரவே இல்லை.. ஆக விருந்து களைகட்டியிருக்கும்... இன்னொரு அம்சா வந்தே விட்டார். இனி... மீனவர்கள் செத்தாலும் செய்தி வராது..

அடத்தூ........