Friday, September 11, 2009

ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண், எல்லியன் ஷேண்டர். மருத்துவரான இவர், பேரிடர் காலங்களில் சிக்கிய மக்களை மனச் சிதைவுகளில் இருந்து மீட்கும் பணியில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேவை ஆற்றியுள்ள இவர், தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒபாமா, கிளின்டர் ஆகியோரிடம் அளித்துள்ளார். (அதனால் என்ன பயன் என்று கேட்காதீர்கள்).

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதியும், மனுக்களை திரட்டியும் இணைய தளத்தில் பரப்பி வருகிறார்.

முள்வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள மூன்றரை லட்சம் தமிழர்களின் நிலை குறித்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக இவர் சென்னை வருவதாக இருந்தது. உள்அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனுமதி தராமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா வருவதற்கான இவரது விசாவை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ரத்து செய்துள்ளது..

ஜூலை 16 ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 ம் தேதி வரை செல்லத் தக்க வகையில் விசா அனுமதி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 10 ம் தேதி இவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி நடத்திய சோதனைகளுக்காக வெடித்துக கிளம்பிய இந்திய ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தமிழகம் வர இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டிப்பார்களா?

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களையும் சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்லி வந்ததை இதுவரை கண்டித்து வந்த இந்திய தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் இந்தியாவை கண்டிப்பார்களா? அந்தப் பெண் என்ன தீவிரவாதியா? இல்லை சோனியாவுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள் என்று தேர்தல் பரப்புரை செய்ய வந்தரா?

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்த தமிழகக் காவல்துறை மற்றும் அவரை இந்தியாவுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என்று மறுத்த இந்திய அரசு ஆகியோருக்கு தமிழினத் தலைவர் கருணாநிதி தகுந்த முறையில் பதிலளிப்பாரா?

மனித உரிமையைப் பேணும் ஹிந்து ராம், அ.மார்க்ஸ், போன்றவர்கள் இப்பிரச்னை குறித்து பேசுவார்களா? மனித உரிமை ஆர்வலர் ஒருவர் வருவதைக் கூட அனுமதிக்காத
இந்தியா போன்ற நாட்டில் வாழுவதற்காக நான் கெட்கப்படுகிறேன்.

Wednesday, September 2, 2009

தமிழுக்கு கெட் அவுட் ஹிந்திக்கு கட்அவுட்டா?


சென்னை மயிலையில் ரயில்வே முன்புதிவு மையம் உள்ளது, சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். அந்த முன்பதிவு மையத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்றிருக்கிறார். அப்போது முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழிலேயே விவரங்களைப் பூர்த்தி செய்து அங்குள்ள முன்பதிவு அலுவலகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ஆங்கிலத்திலோ இந்தியிலோ பூர்த்தி செய்து தந்தால்தான் முன்பதிவு செய்தி தருவேன் என்று கறாராக கூறியிருக்கிறார், அந்த அலுவலர்.


அந்த நபருக்கு அருகே அமர்ந்திருந்த அலுவலரும இதையே வழிமொழிந்திருக்கிறார். கடுப்பாகிப் போன அந்த அம்மா தனக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்றும் விண்ணப்பத்தில் உள்ள பெயர்களை நான் கூறுகிறேன் நீங்கள் வேண்டுமானால் அதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து டிக்கெட் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அவரை அவமானப்படுத்தும் வகையில் (அரசு அலுவலகங்களில் என்ன நடக்கும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டுதானே) பேசியிருக்கிறார்கள்.

மனமுடைந்த அவர் தன் வீட்டிக்குச் சென்று தன் கணவரை அழைத்து வந்து

அந்த மையத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருக்கிறார். அதைப் பார்த்த அந்த அலுவலர்கள் மேலும் அந்தப் பெண்ணை திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

பிரச்னைக்குக் காரணம், அந்த முன்பதிவு அலுவலகத்தில் உள்ள முன்பதிவாளர்கள் நான்கு பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். லல்லு ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணியில் சேர்க்கப்பட்டவர்களாம். ஒரே ஒரு தமிழர் மட்டுமே அங்கு முன்பதிவு அலுவலராக உள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்பாளரும் நடந்த விவரத்தை மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி விட்டார். ஆனால் வீணாய் போன தொழில் சங்கத்தினர் அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்து விட்டார்கள்.


பிரச்னை என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு ரயில் டிக்கெட்டைக் கூட தமிழில் பூர்த்தி செய்து எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா? இதே மகாராஷ்டிரத்தில், கேரளத்தில், ஏன் கர்நாடகாவில் இப்படி நடந்திருந்தால், ராஜ் தாக்கரேக்களும், வாட்டாள் நாகராஜன்களும் சும்மா விட்டிருப்பார்களா? தினகரன் நாளிதழில் (அங்கேயும் மொழி உணர்வாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்) மயிலாப்பூர் சம்பவம் பற்றிய செய்தி வெளியானது. அதையாரும் கண்டு கொள்ளவில்லை. பெண் சாமியார் சாராயம் குடித்துக் கொண்டு குறி சொல்கிறாள் என்றால் கவர் ஸ்டோரி வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.


இவர்தான் உங்கள் ஹீரோ என்று எந்த ஹீரோ யாருடன் படுத்தான் என்பதை எழுதி வரும் ஜூனியர் விகடன்களும் இப்பிரச்னையை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஹிந்தியை கட்டாய மொழிப்பாடமாக்க மைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் பாடத்திட்டத்தின் வாயிலாகப் புகுந்து ஒவ்வொரு இடத்திலும் இப்பட கட்டாயமாக ஹிந்தியில் எழுதுங்கள் என்று சொல்லி தமிழை புறந்தள்ள முயல்வார்கள். இதையும் கருணாநிதி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே, மைலாப்பூர் முன்பதிவு மையத்தில் நடந்தது நம் தாய் மொழி மீது திணிக்கப்படும் ஓர் அபாயத்தை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறது.


நண்பர்களே இனி நீங்கள் தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் தமிழிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். அதிலும், ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் மட்டும் பூர்த்தி செய்யுங்கள். அப்போது தான் தமிழன் எவ்வளவு நெஞ்சுரம் படைத்தவன் என்பது டெல்லிக்காரன்களுக்கும், அவனை நம்பிப் பிழைப்பை ஓட்டும் கருணாநிதி வகையறாக்களுக்கும் புரியும். இப்போதைக்கு

தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தது தவறில்லை என்று வாதிட்ட மயிலாப்பூர் லட்சுமிக்கு ஞானி பாணியில் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.


இப்பிரச்னை பற்றி வெகுஜன பத்திரிகைகளில் எழுதும்படி உங்கள் பத்திரிகை நண்பர்களிடம் கோருங்கள் நன்றி.

Tuesday, September 1, 2009

தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பீ தின்னலாம்இலங்கையில் நடப்பது அப்பட்டமான தமிழின அழிப்பு என்று அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா (கியூபாவும் சேர்ந்து கொண்டது என்பதுதான் ஆச்சரியம்) வாக்களித்தது. இதன்மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய இக்கட்டில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றிவிட்டது, இந்திய அரசு.

இப்படியான சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையளர்கள் என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் இக்கட்டையும் ஏற்படுத்திவிட்டது. தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களைக் கட்டி சுட்டுத்தள்ளுகிறது இலங்கை ராணுவம். இதை வெளியிட்டது, இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஜனநாயத்துக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள்.

அந்த நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவாக மூச்சு விட்டாலே தன் நண்பனாக இருந்தாலும் (உ.ம். லசந்த விக்ரமசிங்க) கொன்றொழித்துவிடுவான், ராஜபக்சே. உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையிலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார்கள், அந்த ஊர் பத்திரிகையாளர்கள். ஆனால் இங்கே.....

அச்சம் என்பது மடமையடா என்ற பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களில் பலரும், இலங்கைத் துணைத் தூதரகம் கொடுக்கும் பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே கொல்லப்பட்ட போது ஒருசில பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை வரவேற்கிறேன்.

இலங்கை அரசுக்கு ஆதாரவாக ஐ.நா.வில் வாக்களித்த இந்திய அரசை கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு இந்த வீடியோ ஆதாரம் மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்தது, நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நிவாரண நிதி என்ற பெயரில் இலங்கைக்கு ஐநூறு கோடி ரூபாய் கொடுத்தது என தமிழகமும், இந்தியாவும் இலங்கையில் நடக்கும் இனஅழிப்புக்குத் துணை போவதை சுட்டிக் காட்ட இதுவே நல்ல சந்தர்ப்பம்.

ஆனால் தமிழகப் பத்திரிகையாளர்கள் இந்த வீடியோ விவரம் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையையும் பதிவு செய்யவில்லை. ஒரு போராட்டம், ஓர் ஆர்ப்பாட்டம் உண்டா? இவர்கள் எல்லாம் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை பீ தின்கிறார்களா?

இப்போது இலங்கைப் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது, இலங்கை நீதிமன்றம். இதை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தியாவோ இலங்கைக்கு கூட்டிக் கொடுக்கிறது. கருணாநிதி அதற்கு விளக்குப் பிடிக்கிறான். அவர்களை செருப்பில் அடித்தால் என்ன? அதற்கு முன்பு முதுகெலும்பு இல்லாத தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் முகத்தில் காறித் துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது.


திஸ்ஸநாயகம் விவகாரத்திலாவது ஒரு போராட்டத்தை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் விரைவில் நடத்தினால் மேற்கண்ட பாராவில் உள்ள என் கண்டனத்தை அந்தப் போராட்ட மேடையிலேயே நான் வாபஸ் பெற்றுக் கொள்வேன். அதுவரையிலும் ம்னதளவில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை காறித்துப்பிக் கொண்டுதான் இருப்பேன்.

பன்றிக் காய்ச்சலை பரபரப்பாக்குகிறார்கள் என்று ஊடகவியலாளர்கள் மீது குறைப்பட்டுக் கொள்ளுபவர்கள் இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டார்களா?

நன்றி