அமெரிக்காவைச் சேர்ந்த பெண், எல்லியன் ஷேண்டர். மருத்துவரான இவர், பேரிடர் காலங்களில் சிக்கிய மக்களை மனச் சிதைவுகளில் இருந்து மீட்கும் பணியில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேவை ஆற்றியுள்ள இவர், தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒபாமா, கிளின்டர் ஆகியோரிடம் அளித்துள்ளார். (அதனால் என்ன பயன் என்று கேட்காதீர்கள்).
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதியும், மனுக்களை திரட்டியும் இணைய தளத்தில் பரப்பி வருகிறார்.
முள்வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள மூன்றரை லட்சம் தமிழர்களின் நிலை குறித்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக இவர் சென்னை வருவதாக இருந்தது. உள்அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனுமதி தராமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா வருவதற்கான இவரது விசாவை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ரத்து செய்துள்ளது..
ஜூலை 16 ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 ம் தேதி வரை செல்லத் தக்க வகையில் விசா அனுமதி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 10 ம் தேதி இவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி நடத்திய சோதனைகளுக்காக வெடித்துக கிளம்பிய இந்திய ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தமிழகம் வர இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டிப்பார்களா?
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களையும் சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்லி வந்ததை இதுவரை கண்டித்து வந்த இந்திய தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் இந்தியாவை கண்டிப்பார்களா? அந்தப் பெண் என்ன தீவிரவாதியா? இல்லை சோனியாவுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள் என்று தேர்தல் பரப்புரை செய்ய வந்தரா?
சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்த தமிழகக் காவல்துறை மற்றும் அவரை இந்தியாவுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என்று மறுத்த இந்திய அரசு ஆகியோருக்கு தமிழினத் தலைவர் கருணாநிதி தகுந்த முறையில் பதிலளிப்பாரா?
மனித உரிமையைப் பேணும் ஹிந்து ராம், அ.மார்க்ஸ், போன்றவர்கள் இப்பிரச்னை குறித்து பேசுவார்களா? மனித உரிமை ஆர்வலர் ஒருவர் வருவதைக் கூட அனுமதிக்காத
இந்தியா போன்ற நாட்டில் வாழுவதற்காக நான் கெட்கப்படுகிறேன்.
நல்லதொரு ஆக்கம் ஐயா,
ReplyDeleteமனிதவுரிமை பேசும் இந்து ராம் போன்றவர்கள் இத்தகைய விடயங்களில் எல்லாம் கவலைப்படமாட்டார்கள்.
சாந்தி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன் தேர்வு
ReplyDeletedid Sharukhan go to USA to Advice USA or incinerate any useless commotion among people?
ReplyDeleteதமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)
ReplyDeleteநியாயமான கேள்விதாங்க... சினிமா நடிகன்னா வாயைப்பொளக்கறானுங்க..
ReplyDeleteநான்கூட இதே விசயத்தை வேறமாதிரி எழுதியிருந்தேன்... நேரமிருந்தால் பார்க்கவும்...
http://vimarsagan1.blogspot.com/2009/08/blog-post_21.html
ஷாருக்கான் நடிகர் என்பதற்காக அல்ல முஸ்லிம் என்பதற்க்காகத்தான் தடுத்து நிறுத்தப்பட்டார்.ஒரு முஸ்லிம் இந்திய நாட்டில் பெரிய புடுங்கியா(அதன் நடிகரா) இருந்தா கூட அமெரிக்காவுல முஸ்லிம்களின் கதி என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.சாருக் மட்டுமல்ல உள்நாட்டில் தான் முஸ்லிம் என்பதையே மறந்து மறுத்து வேஷம் போடும் பல புடுங்கிகள் கூட இப்படி சிக்கி அவமானபட்டிருக்கின்றன.அதனால் இவர்கள் எல்லாம் புத்தி வந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிகாதே என்று அமெரிக்காவுக்கும் இந்திய உளவுத்துறை மற்றும் ஊடகங்களுக்கும் எதிராக வாய் திறந்து கூட பேச போவதில்லை.இவையெல்லாம் முஸ்லிம் என்ற ஒரு இனத்திற்கெதிரான அடக்குமுறைகள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.உங்கள் கோபம் சரி.அதை விட்டு விட்டு தென்னமரதுக்கும் புடலங்கயுக்கும் முடிச்சு போட கூடாது.மனித உரிமை ஆர்வலர் இந்திய வர மறுக்கபட்டதர்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.இதில் இந்த இடுகைக்கு தமிழ் மணத்தின் பரிசு வேறு...தமிழ் மணத்தின் தரம் புரிகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பல சிறந்த கட்டுரைகள் வெளியாகி உள்ளன.அதெல்லாம் தமிழ்மணத்தின் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.உங்க அரசியலே அரசியல்தான்.
ReplyDeleteNice Entry. Thanks for sharing this information. I never heard/read about this news anywhere. This shows how Indian Media overpowered by Indian Govt public relation and SriLankan public relation is very strong than Indian Media. BTW, Best Wishes for Award from TamilManam.
ReplyDelete