Wednesday, July 15, 2009

''தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்து! இந்தியாவை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கு!!''
வேலு பிரபாகரனின் இளைய மகன் பாலசந்தரனும் இலங்கை ராணுவத்தின் வசம்சிக்கி துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானதை இந்த இதழ் ஜூனியர்விகடனின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருக்கிறது. (கடைசி வரை தானும் தன் குடும்பமும் போர்க்களத்தில் தான் இருப்போம் என்று இறுதிவரை போரிட்ட வேலு பிரபாகரன் போன்ற ஒரு வீரன் எந்த இனத்துக்கும்கிடைக்க மாட்டான் என்றே நினைக்கிறேன்)


தமிழகத்திலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள புலிகளுக்குஎதிரான கருத்தை உடையவர்கள், (மார்க்ஸ் போன்றவர்கள்) புலிகளின் இந்தத் தோல்விக்குக் காரணங்கள் என்னென்ன? அவர்களின்தவறான அணுகுமுறைகள் என்ன-? என்று எழுதிக் கொண்டும்பேசிக்கொண்டும் திரிகிறார்கள். தமிழகத்தில் உள்ள புலிகள்ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் மோசமான வழிகாட்டுதலால்தான் புலிகள் இந்தத் தோல்வியை சந்தித்ததாகபேசுகிறார்கள் மார்க்ஸ் போன்றவர்கள்.புலிகள் ஆதரவாளர்களோ, புலிகள் மீண்டும் எழுவார்கள்; பிரபாகரனும் வருவார் என்றுபேசிக் கொண்டிருக்கிறார்கள்.சிங்களவன் ஜெயித்துவிட்டான்; அவனைக் கோபப்படுத்தாமல் இனி தமிழர்கள் அடங்கி, ஒடுங்கிதான்வாழ வேண்டும் என்று தமிழினத் தலைவர்கள் சிலர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் இலங்கைத் தமிழர்களின் புணர்வாழ்வுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டோம்இனி யாரும் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என்கிறது காங்கிரஸ் தலைமையிலானஇந்தியப் பேரரசு.நான் கேட்பது என்னவென்றால், மே 16 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியானஅன்றிலிருந்து தொடர்ந்து கொத்துக் கொத்ததாக உலகில் வேறு எங்கும்இதுவரை நடந்திராத அளவுக்கு மனிதப் படுகொலைகளை சிங்கள அரசுசெய்திருக்கிறது. இதற்கு முன்னரும் இதே இனப் படுகொலைகளைத்தான்அந்த நாடும், அந்நாட்டில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளும் செய்து வந்தன என்பதும் ஒருபக்கம் இருக்கட்டும்.
போரின் இறுதி நாளில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொல்லிசமாதானக் கொடியுடன் (இந்திய அரசு, ஜ.நா சபை, இலங்கைத் தமிழ் எம்.பிக்கள்,தமிழக அரசியல் புள்ளிகளான கனிமொழி, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்) சரணமடைய வந்த நடேசன் போன்றோர்களை (இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன) ஈவு இரக்கமின்றிசுட்டுக் கொன்றார்கள், சிங்கள ராணுவத்தினர்.ஓரிரு நாட்களில் 20 ஆயிரம் பேரில் இருந்து (குறைந்தது) 30 ஆயிரம் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வரும்செய்திகள் உறுதி செய்கின்றன. இருப்பினும் இனப் படுகொலைக்கு எதிராக யாரும் எதையும் இங்குப் பதிவு செய்யவே இல்லை. இதில் வைகோ ஆகட்டும், நெடுமாறன் ஆகட்டும், ஏன் மார்க்ஸ் ஆகட்டும்,கருணா(நிதி) ஆகட்டும் எதையும் செய்யவில்லை.


ஆகஸ்ட் 6ம் தேதி தன் நாட்டின் மீது அணுகுண்டு வீசிய தினத்தை ஒவ்வொராண்டும் நினைவு கூர்ந்து அமெரிக்காவுக்கும், போரின் வெற்றியை உயர்த்திப் பிடிக்கும் வல்லரசுகளுக்கும்குற்றஉணர்வை ஏற்படுத்தி வருகிறது ஜப்பான். அதையே இங்கே மனித உரிமை பேசுபவர்களும் தமிழுணர்வை விதைப்பவர்களும் செய்யவில்லை என்பதுதான என் கேள்வி.
இதற்கெல்லாம் விதி விலக்காக, மவுன பேரணி நடத்தி மாபெரும் இனப் படுகொலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்கிறேன்.


ஆக, மாவீரன் முத்துக்குமாரின் தியாகத்தால் ஒன்றிணைந்த இளைஞர்களே! அமைப்புகளே!!


உங்களிடம் கேட்கிறேன். பெண்களையும், குழந்தைகளையும் (பாலசந்திரனையும் சேர்த்துத்தான்) கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்கள அரசுக்கும், அதை ஊக்குவித்த இந்தியப் பேரரசுக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்வோம் வாருங்கள்........

No comments:

Post a Comment