Friday, July 3, 2009

வணங்கா மண் கப்பலுக்குள் நுழைந்த கருப்பாடு!



இத்தனை நாட்களாக ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம் மற்றும் அரசியல் காரணங்களால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணங்கா மண், சென்னை துறைமுகத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நுழைந்தது. இது, நிவாரணக் கப்பல்தான் என்றாலும், ஒருசிலருக்கு பல லட்சம் ரூபாய் சுருட்டும் நிதிக் கப்பலாகவும் இருக்கிறது.அதில் உள்ள நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கு மற்றொரு சரக்குக் கப்பல் மூலமாகக் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. அப்படியென்றால் கேப்டன் அலி எங்கே போகிறது? அது கொல்கத்தா துறைமுகத்தில் சுக்குநூறாக உடைத்து பழைய -இரும்புக் கடைக்குப் போகிறது. தனது கடைசிப் பயணத்தில் உலகப் புகழ் பெற்று விட்ட அந்தக் கப்பல் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உடைக்கப்படுகிறது.கப்பல் கேப்டன் முகமது முஸ்தஃபா, கப்பல் சிப்பந்தி உதயன் ஆகியோர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு விமானம் மூலம் இந்தியாவில் இருந்து பறந்து சென்று விட்டனர். எனது நண்பர்கள் சிலர் மூலமாக எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை சொல்கிறேன்:இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வரும் பட்சத்தில் அதில் உள்ள சரக்குகளை இறக்கவும், இலங்கை செல்லும் சரக்குக் கப்பலில் ஏற்றவும் ஏதாவது ஒரு ஏஜெண்டுக்கு வேலை தரவேண்டும். அந்த வேலையைச் செய்யும் ஏஜெண்டுக்கு பல லட்சம் ரூபாய் கூலி வெளிநாட்டுத் தமிழர்கள் மூலம் கிடைக்கும். ஏற்கெனவே இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் வரை வாடகை செலுத்தியது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு. இப்போது இந்த ஏஜெண்டுகளுக்கும் இலங்கை செல்லும் சரக்குக் கப்பலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் பணம் செலுத்துவார்கள்.இந்தக் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்குச் செல்ல நடவடிக்கை எடுங்கள் என்று தமிழுணர்வாளர்கள் முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் நிவாரணப் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி பெற்றிருந்த ஒரு ஏஜெண்ட் இருந்ததாகத் தெரிகிறது. பாவம் இந்த லாபி அந்த உணர்வாளர்களுக்கு உண்மையில் தெரியாது.அதிலும¢ அண்மையில் பாதிரியார் ஜெகத் கஸ்பரால் உளவாளி என்று அடையாளம் காட்டப்பட்ட ஒரு நபர், டெல்லி சென்றான். சரக்கை ஏற்றி இறக்கும் வேலைய தனக்குச் சாதகமான ஒரு ஏஜெண்டுக்குப் பெற்றுத் தர டெல்லியில் இருந்து பல லாபிகளை செய்திருக்கிறான். அதன்படியே, கப்பல் வந்து சேர்ந்த அன்று நிருபர்களை கப்பல் பக்கம் போகவிடால் தடுத்துக் கொண்டிருந்த காவல் துறையினர், அந்த உளவாளி நபரைப் பார்த்தும் சல்யூட் அடித்து மரியாதையோடு கப்பலுக்குள் அனுப்பி வைத்தனர். என் நண்பர்கள் சொல்கிறபடி பார்த்தால் பாதிரியர் கஸ்பர் சொன்ன அந்த நபர் ஒரு ‘மாமா பையன்’ என்று தெரிகிறது.உலகத் தமிழர்கள் உரிமைக்காகப் போராடுவதை சில கருப்பாடுகள் காசு பார்க்கப் பயன்படுத்திக் கொள்கின்றன!

2 comments:

  1. ஐயா தங்களை அறியேன். ஆயினும் உண்மையை உரைத்தமைக்கு நன்றிகள்.வணங்காமண் கல்கத்தாவில் உடைபடப்போகிறது என்பதனை ஆனிமாதம்11ம் திகதி எழுதினேன். அதற்கு வந்த எதிர்ப்புகள் மிரட்டுகள் ஏராளம்.

    நான் எழுதியதன் நோக்கம் இதுபோல இனிமேல் எமது புலம்பெயர்ந்தோரின் உழைப்பு வீணாகக்கூடாது என்ற நோக்கில் தான்.

    எங்கள் மக்கள் அகதி முகாமில் சாக இப்படி உலகத்துக்கு பரப்புரைக்கிறோம் என்ற பயில்வான்களின் நோகாமல் மக்களை ஏமாற்றுவதை வெளியில் தெரிவிக்கவே எனது எழுத்து அமைந்தது.ஆனால் அதெல்லாம் பறவாயில்லை உலகத்துக்கு எங்களிட்டை கப்பல் அனுப்பவும் முடியுமென்று சொல்ல முனைந்ததே சரியனெ்று வாதிட்டு தமிழின அழிவில் வீரம் கொண்டாடியோருக்கு ஓம்சாமி போட்டவர்களுக்கு உண்மைகள் தெரிய நீங்கள் எழுதிய இக்கட்டுரையானது பலருக்கும் சென்றடைந்துள்ளது. உண்மைகள் புரியப்பட தாங்கள் எழுதிய கட்டுரைகள் போல இன்னும் தமிழகத்துப் பரபரப்புப் பத்திரிகைகளில் ஈழத்தவரின் இருப்பை வியாபாரமாக்கும் ஊடகங்கள் அரசியல்வாதிகள் போன்றோரை நோக்கியும் எழுதப்படட்டும்.

    சாந்தி

    ReplyDelete
  2. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி தோழரே
    ஈழ விடுதலைக்காக தொடர்ந்து எழுதுவேன்.
    நம் போராட்டம் வெல்லும்
    நன்றி

    ReplyDelete