Wednesday, August 12, 2009

தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி




பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.


பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.


இதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.



1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.


2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.


3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.


4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.


5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-?


6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-?


7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.



இதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-?


இப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

Monday, July 20, 2009

அம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிகையாளர்கள் (இனத் துரோகிகள்!)



'நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சீமான் சனியன்று நடத்தியபொதுக் கூட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர் ஒரு கருத்தைவெளியிட்டிருக்கிறார்.


அவர் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழுணர்வுக்கு எதிராக தமிழக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகபத்திரிகையாளர்கள் 24 பேருக்கு தலா ஐந்து பவுன்ப்ரேஸ்லெட்களை (ஆண்கள் அணியும் வளையல்) கடந்த பொங்கல் அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துணைத் தூதர் அம்சா வழங்கியிருக்கிறார்.அதுமட்டுமின்றி பத்திரிகை அலுவலங்களுக்கு தலா இருபது மடிக்கணினிகளையும்வழங்கியிருக்கிறார், அம்சா.


அதில் தினத்தந்தி மட்டுமேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணினிகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது.தினத்தந்தி, தினமணி, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள்மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்உள்ளது என்றும் கஸ்பர் பேசியிருக்கிறார்.



அவர் பேசியதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.24 நிருபர்கள், பத்திரிகையாளர்களுக்கு ப்ரேஸ்லெட்கள்கொடுக்கப்பட்டதுதான். இதைக் கேட்கவே மலத்தைமிதித்தது போன்ற ஒரு அருவறுப்பு ஏற்படுகிறது.அந்த நிருபர்கள் மற்றும் கணினி பெற்றுக் கொண்ட பத்திரிகை அலுவலகங்களின்பட்டியலை வெளியிட்டால்நன்றாக இருக்கும்.


கஸ்பர் நேரடியாக இல்லாவிட்டாலும்மறைமுகமாக அந்தப் பட்டியலை வெளியிட்டால்தமிழர்களுக்கு நம் எதிரிகளை அடையாளம் காட்டியமிகப் பெரிய வேலை வெற்றிகரமாக முடிந்து விடும். செய்வாரா?உங்களில் யாராவது அவரை நேரில் பார்த்தால் என் கோரிக்கை பற்றி சொல்லவும்.

Wednesday, July 15, 2009

''தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்து! இந்தியாவை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கு!!''




வேலு பிரபாகரனின் இளைய மகன் பாலசந்தரனும் இலங்கை ராணுவத்தின் வசம்சிக்கி துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானதை இந்த இதழ் ஜூனியர்விகடனின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருக்கிறது. (கடைசி வரை தானும் தன் குடும்பமும் போர்க்களத்தில் தான் இருப்போம் என்று இறுதிவரை போரிட்ட வேலு பிரபாகரன் போன்ற ஒரு வீரன் எந்த இனத்துக்கும்கிடைக்க மாட்டான் என்றே நினைக்கிறேன்)


தமிழகத்திலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள புலிகளுக்குஎதிரான கருத்தை உடையவர்கள், (மார்க்ஸ் போன்றவர்கள்) புலிகளின் இந்தத் தோல்விக்குக் காரணங்கள் என்னென்ன? அவர்களின்தவறான அணுகுமுறைகள் என்ன-? என்று எழுதிக் கொண்டும்பேசிக்கொண்டும் திரிகிறார்கள். தமிழகத்தில் உள்ள புலிகள்ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் மோசமான வழிகாட்டுதலால்தான் புலிகள் இந்தத் தோல்வியை சந்தித்ததாகபேசுகிறார்கள் மார்க்ஸ் போன்றவர்கள்.



புலிகள் ஆதரவாளர்களோ, புலிகள் மீண்டும் எழுவார்கள்; பிரபாகரனும் வருவார் என்றுபேசிக் கொண்டிருக்கிறார்கள்.



சிங்களவன் ஜெயித்துவிட்டான்; அவனைக் கோபப்படுத்தாமல் இனி தமிழர்கள் அடங்கி, ஒடுங்கிதான்வாழ வேண்டும் என்று தமிழினத் தலைவர்கள் சிலர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் இலங்கைத் தமிழர்களின் புணர்வாழ்வுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டோம்இனி யாரும் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என்கிறது காங்கிரஸ் தலைமையிலானஇந்தியப் பேரரசு.



நான் கேட்பது என்னவென்றால், மே 16 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியானஅன்றிலிருந்து தொடர்ந்து கொத்துக் கொத்ததாக உலகில் வேறு எங்கும்இதுவரை நடந்திராத அளவுக்கு மனிதப் படுகொலைகளை சிங்கள அரசுசெய்திருக்கிறது. இதற்கு முன்னரும் இதே இனப் படுகொலைகளைத்தான்அந்த நாடும், அந்நாட்டில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளும் செய்து வந்தன என்பதும் ஒருபக்கம் இருக்கட்டும்.
போரின் இறுதி நாளில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொல்லிசமாதானக் கொடியுடன் (இந்திய அரசு, ஜ.நா சபை, இலங்கைத் தமிழ் எம்.பிக்கள்,தமிழக அரசியல் புள்ளிகளான கனிமொழி, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்) சரணமடைய வந்த நடேசன் போன்றோர்களை (இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன) ஈவு இரக்கமின்றிசுட்டுக் கொன்றார்கள், சிங்கள ராணுவத்தினர்.



ஓரிரு நாட்களில் 20 ஆயிரம் பேரில் இருந்து (குறைந்தது) 30 ஆயிரம் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வரும்செய்திகள் உறுதி செய்கின்றன. இருப்பினும் இனப் படுகொலைக்கு எதிராக யாரும் எதையும் இங்குப் பதிவு செய்யவே இல்லை. இதில் வைகோ ஆகட்டும், நெடுமாறன் ஆகட்டும், ஏன் மார்க்ஸ் ஆகட்டும்,கருணா(நிதி) ஆகட்டும் எதையும் செய்யவில்லை.


ஆகஸ்ட் 6ம் தேதி தன் நாட்டின் மீது அணுகுண்டு வீசிய தினத்தை ஒவ்வொராண்டும் நினைவு கூர்ந்து அமெரிக்காவுக்கும், போரின் வெற்றியை உயர்த்திப் பிடிக்கும் வல்லரசுகளுக்கும்குற்றஉணர்வை ஏற்படுத்தி வருகிறது ஜப்பான். அதையே இங்கே மனித உரிமை பேசுபவர்களும் தமிழுணர்வை விதைப்பவர்களும் செய்யவில்லை என்பதுதான என் கேள்வி.
இதற்கெல்லாம் விதி விலக்காக, மவுன பேரணி நடத்தி மாபெரும் இனப் படுகொலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்கிறேன்.


ஆக, மாவீரன் முத்துக்குமாரின் தியாகத்தால் ஒன்றிணைந்த இளைஞர்களே! அமைப்புகளே!!


உங்களிடம் கேட்கிறேன். பெண்களையும், குழந்தைகளையும் (பாலசந்திரனையும் சேர்த்துத்தான்) கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்கள அரசுக்கும், அதை ஊக்குவித்த இந்தியப் பேரரசுக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்வோம் வாருங்கள்........

Friday, July 10, 2009

அடப்பாவிகளா?: ஹிந்து ராம் கொடுத்த பேட்டியும் எடுத்த பேட்டியும்!


ஹிந்து பத்திரிகையில் ராஜபக்சேவின் நேர்காணல் வெளிவந்து கொண்டிருக்கிறது.


இங்கு கேள்வி கேட்பவர், ஹிந்துராம். ஜூலை 7ம் தேதி வெளியான பேட்டியில் கேள்வி கேட்க வேண்டிய ஹிந்துராம், ‘‘so you say they (LTTE) were most ruthless most powerful terriorist organisation in the world’’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.


அதற்கு அதிபர் ராஜபக்சே, ‘‘yes, the most ruthless and richest terrorist organisation in the world. And well equipped, well trained’’என்று சொல்லியிருக்கிறார்.


ஆக, ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சொல்லாமல் விட்ட ஒரு விமர்சனத்தை எடுத்துக் கொடுத்து அவர் வாயால் சொல்ல வைத்துப் பதிவு செய்திருக்கிறார்.


இதற்குப் பெயர் தான் ஜெர்னலிசமா? பத்திரிகை தர்மமா? நக்கீரனையும் மற்ற சில பத்திரிகைகளையும் சோ போன்றவர்கள் பொய்யை எழுதுகிறார்கள் என்று சொல்லும் போது இப்படி பேட்டி யெடுக்கும் ஒரு நபரே ஒரு கருத்தைச் சொல்லி அதை பேட்டி கொடுப்பவரின் வாயால் வரவழைப்பது மட்டும் ஒரு சார்பு நிலை இல்லையா? ஜூனியர் விகடனில் ஹிந்து ராம் அவர்களின் பேட்டி இன்று வந்திருக்கிறது.


அவர் இலங்கை ராணுவத்திற்காக கொடி பிடிப்பது ஏன் என்று, நாம் யோசித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரது பேட்டியில் உள்ள சில அபத்தங்களை தோலுரித்துக் காட்டுவது வலைப்பதிவு விதிகளின் படி அதி முக்கியமானதாக இருக்கிறது.


அபத்தம் ஒன்று,


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்று ஜூவி நிருபரின் கேள்விக்கு, ஹிந்து ராம், ‘‘மே 19ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்...’’ என்று பதிலளித் திருக்கிறார். அடுத்ததாக நிருபர் கேட்ட கேள்வி, ‘‘அப்படியானால் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை’’ என்று கேட்கிறார்.


அதற்கு பதிலளித்துள்ள ராம், ‘‘அவர் நாடாளு மன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார். அதுதான் மகா அபத்தமாக உள்ளது. அதாவது, பிரபாகரன் என்று ஒரு சடலம் காட்டப்பட்டது, மே 19ம் தேதி என்பது சரியான தகவல்தான்.


ஆனால் அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், ராஜபக்சே.


நாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரையாற்றும்போது பிரபாகரனை ராணுவம் கொன்றுவிட்டதாக சொல்லப்படுவது குறித்து ஏதாவது பேசுகிறாரா என்று, உலகம் முழுவதும¢ லட்சக்கணக்கான தமிழர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான நிலையில்தான் அவர் பேசவில்லை. நாடாளுமன்ற உரையில் பிரபாகரன் பற்றி ராஜபக்சே ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் ஏற்கெனவே எழுதிவிட்டார்.


ஒரே குட்டையில் ஊறிய ராமும் ராகவனும் இப்படி மாறி மாறி கருத்து சொல்வது சரியா? உங்களுக்கு எதைப் பங்கு போடுவதில் சிக்கல்?உண்மைக்குப் புறம்பாக ஹிந்து ராம் மே 19ம¢ தேதிக்கு முன்னதாகவே ராஜபக்சே நாடாளு மன்றத்தில் உரையாற்றியது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்தியத் தேர்தல் முடிவு வெளியானது 16ம் தேதி. நடேசன் இறந்து விட்டதாக தகவல் வெளியானது 17ம் தேதி.


சார்லஸ் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது, 18ம் தேதி. பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியானது, 19ம் தேதி. அதன்பின் போர் முடிந்தது என்றுதான் நாடாளுமன்றம் கூடியது. இதுகூடவா தெரியவில்லை அந்த ராமுவுக்கு.


இரண்டாவது அபத்தம்.


‘‘பிரபாகரனின் மறைவுக்குப் பின்னால் அங்கிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள இலங்கைக்குச் சென்றேன்‘‘ என்கிறார், அந்தப் பேட்டியில் ராம்.


ஆனால் மற்றொரு கேள்விக்கு, ‘‘முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அவர்களிடம் (தமிழ்மக்களிடம்) பேசினால் இரண்டு பேருக்குமே தர்ம சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் அங்கிருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை’’ என்கிறார்.


இதில் என்ன அபத்தம் என்கிறீர்களா? இருக்கிறது. மக்களின் நிலை குறித்து அறியச் சென்றவர், அந்த மக்களிடம் பேசாமல் (அதுவும் ராணுவத்தினருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்பதற்காக பேசாமல்) திரும்பியிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இருந்து தலைவரைப் பேட்டி எடுக்கச் செல்லும் ஒரு நிருபர் அந்தத் தலைவருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்று முக்கியமான கேள்விகளைக் கேட்காமல் வருவாரா? வந்தால் அதை ஹிந்து ராம் வரவேற்பாரா?ஹிந்துவை தூக்கிப் பிடிப்பவர் நீங்கள் என்றால் அந்த நிலைப்பாட்டை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.

Wednesday, July 8, 2009

படித்து விட்டீர்களா ஆனந்த விகடன்?


இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.

கருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்ற உணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும்.நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவேஅந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.

Tuesday, July 7, 2009

பச்சோந்தி கருணாநிதி முகத்தில் காறித் துப்புங்கள்!



‘‘இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம். சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது’’ இப்படி சட்டப்பேரவையில் அண்மையில் திருவாய் மலர்ந்தார், தமிழினத் தலைவர் கருணாநிதி.


சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. அது பற்றி பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு சரியான நேரத்தை நமது கருணாநிதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.


அந்தப் புத்தகத்தின் தலைப்பு:


‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’.1985 அக்டோபர் 3 முதல் 13 ஆகிய நாட்களில் முறையே கோவை, திண்டுக்கல், தூத்துக்கு, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் பேரணி, பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியது, அந்த நூல்.


அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலேயே இப்படி வருகிறது:


இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து காக்கத் தமிழ்ஈழம் மலர்வதுதான் ஒரே வழி என்பதை வலியுறுத்தி, தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்தும் பேரணி_பொதுக்கூட்டங்களில் தலைவர் கலைஞர் (இதே கருணாநிதிதான்) அவர்கள் மக்களிக்கிடையில் படித்து ஏற்கும் உறுதிமொழி.


1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு தருவோம்!


2.இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும், நிரந்தர பாதுகாப்பும் கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்!


3.தமிழ் ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவற மாட்டோம்!


4.இந்தக் கடமைகளில் நாங்கள் செய்யும்போது மத்திய_மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம், என்ற ரீதியில் போகிறது அந்தப் புத்தகம்.


1985_ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா. இரு மாநில அரசையும் இலங்கைப் பிரச்னையில் தலையிட வலியுறுத்தி கருணாநிதி போட்ட வேஷத்தின் அடையாம்தான் இந்தப் புத்தகம்.


1985_ல் எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ் ஈழத்துக்காக உயிரையும் கொடுப்பாராம். போராளிகளுக்கு அடைக்கலம் வேறு கொடுப்பாராம் இந்த கேடு கெட்டக் கருணாநிதி.


ஆனால் இப்போது சிங்களவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழ் ஈழம் கோரிக்கையை யாரும் எழுப்பக் கூடாதாம். இவனைப் போல் ஒரு அயோக்கியனை வேறு எங்கும் பார்க்க முடியாது.


நாளுக்கு நாள் பச்சோந்தியை விட நிறம் மாறியிருக்கிறான். இப்போது சாவும் தருவாய், வாரிசுகளுக்குப் பதவிப் பெற்றுத் தருவதற்காக மாபெரும் இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.


இவ்வளவு பேசும் கருணாநிதி, இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ஒரு கண்டனமானவது தெரிவித்தானா?


எனக்குக் கிடைத்துள்ள இந்தப் புத்தகத்தை ரீ ப்ரிண்ட் போட்டு பரப்பலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவு நியாயத்தை அப்போது பேசிவிட்டு இப்போது எழுந்து கூட நிற்கமுடியாத நிலையில் அயோக்கியத்தனம் செய்கிறான் கலைஞர்.


என் வாழ்வுக்கு ஒரு உன்னதம் கிடைக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் முகத்தில் காறித் துப்ப வேண்டும். இவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பின்னூட்டம் இடுபவர்களைப் பார்த்து வருத்தமடைவேன்.

Monday, July 6, 2009

திருப்பூரில் தினமலர் செய்த தில்லாலங்கடி!





திருப்பூரில் கடந்த 5ம் தேதி பத்திரிகையாளர்கள் சங்கம்சார்பில், மாநகராட்சி மேயர் (திமுக) செல்வராஜைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
தினமலர் நிருபர் இளங்கோவன், போட்டோகிராபர்கோபால் ஆகியோரைத் தகாத வார்த்தையில் திட்டி, தாக்க முற்பட்டதாகவும் (தாக்கியதாகவும் சொல்கிறார்கள்) மேயர்செல்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகர மன்றக் கட்டட பூமி பூஜையின் போது இந்தச் சம்பவம்நடந்துள்ளது. சம்பவத்துக்கு முதல் நாள் மாநகராட்சி பட்ஜெட் கூட்ட முடிவில் (இரவு விருந்துக்குப் பின்) கவுன்சிலர்களுக்குஅன்பளிப்பாக சூட்கேஸ்கள் வழங்கப்பட்டதாம்.அதுபற்றி தினமலரில் வெளியான செய்தியில், 'கவுன்சிலருக்கு நள்ளிரவில்சூட்கேஸ் வழங்கிய மர்மம்' என்று எழுதியிருந்தார்களாம். அதில்கடுப்பான அனைத்துக் கட்சிக் கவுன்சிலர்களும், மேயரை ஏற்றிவிடமேயரும் அங்கு வந்த கோபாலின் காமிராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டு(அலுவலகத்துக்குச் சொந்தமானது) சகட்டு மேனிக்கு அவரைத் திட்டியிருக்கிறார்.விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அந்தச் செய்தியை எழுதிய நிருபர் இளங்கோவனை இங்கே எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்.சமாதானம் பேச வந்த (வேறு பத்திரிகை) நிருபர்களையும் ஏக வசனத்தில் திட்டித் தீர்த்திருக்கிறார்.
இதற்காக கொதித்தெழுந்த சொரணை உள்ள மற்ற பத்திரிகையாளர்கள்உடனடியாக பத்திரிகையாளர்கள் சங்கத்தில் மேயருக்கு எதிராக தீர்மானம் போட்டக் கையோடு,ஞாயிற்றுக் கிழமையன்று மாநகராட்சிக் கட்டடம் முன்பு மேயரைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.தினமலர் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் திருப்பூர் தினமலர் ஊழியர்கள் எல்லோரும் கலந்திருப்பார்கள்என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.இங்குதான் தினமலரின் தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிருக்கிறது.
'தினமலர்நிருபர், போட்டோகிராபரைத் தாக்கிய மேயரைக் கண்டிக்கிறோம்' என்றுபத்திரிகையாளர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்க, மேயரால் தாக்கப்பட்டதாக,கூறப்படும் நிருபர் இளங்கோவன் (அலுவலக வேலையாம்!), போட்டோகிராபர்கோபால் (விசாரணைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டார்) ஆகிய இருவரும் அந்தஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 'தங்களைத் தாக்கியதற்காகத்தானேஇந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என்கிற எண்ணமே இல்லாமல் அந்தஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள், தினமலர் ஊழியர்கள்.
அதே ஆர்ப்பாட்டத்திற்கு தினமலரில் இருந்து ஒரு நிருபரும். போட்டோகிராபரும் ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்க வந்திருந்தார்களாம் (!).

கோவை பதிப்பு தினமலரில்வெளியான ஆர்ப்பாட்டம் செய்யும் போட்டோவில் தினமலர் நிருபர்கள்மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதே இதற்கு சாட்சி. அதையும்வெட்கமே இல்லாமல் பிரசுரிக்க 'ஒரு கட்ஸ்' வேணும் இல்லையா?"ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று பாஸ் சொல்லிவிட்டார்;மீறி யாராவது கலந்து கொண்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் கலந்துகொள்கிறீர்களா, இல்லையா என்பதை அறிய, சிலர் (தினமலர்ஏஜெண்ட்கள் ) மூலம் ரகசியமாக அமர்த்தி உங்களை கண்காணிப்போம்" என்று திருப்பூர் தினமலர் சப்-எடிட்டர் நிருபர்களை மிரட்டியிருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், திருப்பூர் தினமலர் நிருபர் ஒருவர், சக நிருபர்தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுநாளே விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில்பதுங்கிக் கொண்டார்.

தங்கள் ஊழியர் தாக்கப்பட்டதை அறிந்து நியாயமாக கொதித்து எழுந்திருக்கவேண்டிய தினமலர் நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில்தங்கள் (அதுவும் விவகாரத்துக்குக் காரணமான) நிருபர்களைக் கூட கலந்துகொள்ளக் கூடாது என்று தடை போட என்ன காரணம்?ஊரில் கொழுத்தவனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற வழக்கமானதினமலரின் போக்குதான் இந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறது.
மக்கள் பிரச்சினைக்காக யாராவது தெருவில் இறங்கிப் போராடினால் அதைக் கொச்சைப் படுத்துவதும், அவர்களை ஏகத்துக்கு நையாண்டி செய்வதும் தினமலரின் வழக்கம்.
இப்போது தங்களை நம்பி உள்ள ஊழியர்களுக்குநேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்கும் போராட்டத்தைக் கூட புறக்கணிப்பதில்தினமலரின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.தேசிய நடுநிலை நாளேடு தினமலர், 'தவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்போம்'என்று சொல்வதெல்லாம் 'சும்மா'. தன் ஊழியர்கள் மீது நடந்த வன்முறையைக்கூடதட்டிக் கேட்க முன் வரவில்லை. தங்கள் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துகாவல் துறையில், நீதிமன்றத்தில் தினமலர் புகார் செய்யலாம். ஆனால்ஜனநாயக முறையில் அதை எதிர்க்கத் துணிந்த சில பத்திரிகையாளர்களின் போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இனி என்ன செய்தாலும் அதில் என்ன நியாயம் இருக்கும்?
மாநகராட்சி கொடுக்கும் விளம்பரங்களால் 'பவுன்ஸ்' ஆகாத செக் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தினமலர், மேயரைப் பகைத்துக் கொள்ள விரும்பாது. சுயநலமே முக்கியம்; தன் ஊழியர்களின்நலனைப் பற்றி தினமலர் கவலைப்படப் போவதில்லை.தெருவுக்கு இறங்கிப் போராடுவதை வழக்கமாக கொச்சைப்படுத்தும் தினமலர்,தங்கள் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் போன்றவர்களை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே இதன் மூலம் புரிந்திருக்கும்.தினமலர் ஊழியர்களுக்கும் இந்த உண்மை புரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் வெளிப்படையாக அவர்கள் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. தினமலர்நிருபர்கள் யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது என்பதால் இதைப் படிப்பவர்கள் யாராவதுஉங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதை ·பார்வேர்டு செய்யவும்.
நன்றி