Friday, January 29, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் ‘இனப்படுகொலையில் கருணாநிதி‘ நூல் வெளியீடு





இளந்தமிழர் இயக்க வெளியீடான இனப்படுகொலையில் கருணாநிதி ஆதாரங்களுடன் ஒரு குற்றப்பத்திரிகை நூல் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.

நான்காம் கட்ட இறுதிப் போர் தொடங்கியதும், மாங்கொல்லை கூட்டத்தில் பொங்கியெழுந்த கருணாநிதி, சிறிது சிறிதாக சுருதி குறைத்து, பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, நானே ஒரு அடிமை, காலை டிபனுக்கும், மதிய உணவுக்கு இடையே நான்கு மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் கொண்டு வந்தேன், எம்.பி., குழுவை அனுப்பி முப்பதாண்டு இலங்கைப் பிரச்னையை நான்கே நாளில் தீர்த்து வைத்தேன் என்றெல்லாம் சுயபுராணம் பாடிய கலைஞரின் சுயரூபத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது, இந்நூல்.

‘கருணாநிதியின் பக்தர்களால் கூட இதில் உள்ள ஆதாரங்களை மறுத்துப் பேசமுடியாது என்று மணியரசன் அவர்கள் தன் அணிந்துரையில் எழுதியிருக்கிறார். அந்தளவுக்கு நாள், இடம் வாரியாக கலைஞர் ஈழத்திற்கு எதிராக பேசிய எழுதிய கருத்துகளை இந்நூல் பட்டியலிடுகிறது. நான்காம் கட்ட இறுதிப் போரில் தி.மு.க. மற்றும் கருணாநிதியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது என்பதை அறிய இது ஒரு வரலாற்று ஆவணம். தி.மு.க அடிவருடிகள் யாராவது இதற்கு மறுப்புப் பேச முடிந்தால் பேசிப் பார்க்கட்டும்!

புத்தகம் வேண்டுவோர், தொடர்புக்கு
இளந்தமிழர் இயக்கம்,
44/1 பஜனை கோயில் தெரு,
முத்துரங்கன் சாலை, தி.நகர்,
சென்னை. கைபேசி: 90950 13809 ,

3 comments:

  1. நல்ல முயற்சி........ நிச்சயம் வாங்குவோம்

    ReplyDelete
  2. அட்டகாசம் தோழர் அப்படித்தான் போட்டு தாக்குங்கள் ... நம்முடைய இலக்கு தனி தமிழர் நாடே என்று முழங்குங்கள் ... இந்தியன்களை நம்பி நாம் கெட்டு ஒழிந்தது போதும்... இந்தியத்திற்கு நம்மை ஓட்டுகளாக விற்கும் அனைத்து கருங்காலிகளும் ஒழிக்கபடவேண்டும்... நம்முடைய வருங்கால சந்ததியினிரை தமிழராக வாழவைப்போம்....

    தமிழர் நாடு- திருவண்ணாமலை

    ReplyDelete
  3. புத்தகம் வெளியாகிவிட்டதா? எனக்கு 10 படி வேண்டும்... பணம் அனுப்பினால் நேரடியாக இந்தியாவில் சில நண்பர்களின் முகவரிக்கு அனுப்ப இயலுமா?

    ReplyDelete