தமிழ்மணம் வழங்கும் 2009-ம் ஆண்டுக்கான முதல் பரிசு பதக்கம் எனக்குக் கிடைத்திருக்கிறது. தலித் மக்கள் பிரச்சினை, மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகளுக்கான பிரிவில் முதல் பரிசு வழங்கியிருக்கிறார்கள். ‘ஷாருக்கானுக்கு ஒரு நியாயம், தமிழனுக்கு ஒரு நியாயமா?‘ என்ற கட்டுரைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
நான் எந்தக் கட்டுரையையும் திட்டமிட்டு எழுதியது கிடையாது. கோபமும், ஆவேசமும் உந்தித் தள்ளும்போது எழுதத் தொடங்குவேன். உண்மையிலேயே பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை.
இப்போதும் ஒரு வார்த்தையை பலமுறை அடித்து திருத்தி எழுதும் அளவுக்கே என்னுடைய மொழி அறிவு இருக்கிறது. அதிலும் முக்கியமான ஒரு புத்தகத்தை விரைவில் எழுதி வெளியிட உள்ள நிலையில் எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
விருது கிடைத்த செய்தியை என் மனைவியிடம் தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை (கூச்சமாக இருக்கிறது). நான் எழுதிக் கொண்டிருக்கும் அந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்பு மிக விரையில் வரும். தமிழ்மணம் எழுத்தாளர்களும், வாசகர்களும் அந்தப் புத்தகத்தை நிச்சயம் படிப்பார்கள். இப்போதைக்கு ரகசியம்!
மறந்தே விட்டேன், என் கட்டுரைக்கு வாக்களித்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
வாழ்த்துகள்!
ReplyDelete//ருது கிடைத்த செய்தியை என் மனைவியிடம் தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை (கூச்சமாக இருக்கிறது).//
ReplyDeleteநண்பர்களுக்கும் உடனே தெரிவியுங்கள் !
பாராட்டுகள் !
i am so happy to here this. heartly congratulations to you
ReplyDeleteவாழ்த்துகள் தோழா...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete