Sunday, December 25, 2011

நற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…

“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது?
சக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி உணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது? இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை!
தமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும்.
அந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்!



(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)

இந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

3 comments:

  1. sattru peridhaaga pottirukkalaam peridhaakkinaalum ondrum theriyavillai idharkkendru oru padhivai podungal

    ReplyDelete
  2. மாற்றுச் சிந்தனையோ என்று வந்தேன்.ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.அடூர் கோபாலகிருஷ்ணனை சராசரி கேரளத்தான் தெரிந்திருப்பதை விட அறிவுஜீவியாய் தமிழன் தெரிந்து வைத்திருப்பதே அதிகம்.

    இப்போதைய மலையாளப் படங்களைப் பார்ப்பதை விட தமிழ்ப் படங்களே தேவலை எனலாம்.இல்லையென்றால் அசின்,நயன் தாராக்கள் கோடம்பாக்கத்துக்கு பெட்டி கட்டிகிட்டு வந்திருக்க மாட்டாங்க:)

    கேரளத்தான் ஒற்றுமையை நீங்கதான் மெச்சிக்கனும்.முல்லைப் பெரியாறு விசயத்தில் கட்சி சார்ந்து இணைந்து போராடும் கேரளத்துக்காரர்களை விட நம்மிடம் நொள்ளைகள் இருந்தாலும் உணர்வோடு போராடும் தமிழன் உயர்வாகவே தெரிகிறான்.

    டேம் 999 ஆஸ்காருக்குப் போனால் ஆஸ்கார் உருப்பட்ட மாதிரிதான்.

    என்னமோ போங்க கேரளத்து தூரத்துப் பசலை:)

    ReplyDelete
  3. இது ஒரு கேடுகெட்ட பதிவு......

    தமிழ்நாட்டில் உள்ள ஒரு நல்ல விஷயம் கூட உன் கண்ணில் படவில்லையா ......

    உன்னை மாதிரி ஆட்களால் தான் தமிழன் சீரழிகிறான்.

    ReplyDelete