Monday, March 29, 2010

நளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...
நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா? மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா?

மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம்? ராஜீவுக்கு ஒரு நியாயமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.

கருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.

தனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின? நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா?

நளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...

3 comments:

 1. அய்யா கால் தூசி,, நளினி கொன்றது ராஜிவை மட்டுமல்ல...அவரைச்சுற்றி இருந்த காவலர்கள், பொதுமக்கள் இன்னும் ஏராளமானோர்..அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா?
  நளினி என்ன அபலைப் பெண்ணை? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு கிடக்கையில் முருகனுடன் படுத்து குழந்தை பெற்றவள்..எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி இருப்பாள்? அவளுக்கு இன்னும் பல ஆண்டுகள் சிறையில் தள்ள வேண்டும்..
  தமிழ் தமிழ் என்று எல்லாக் குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்குவதே உங்களைப் போன்றோரது வேலையாகிவிட்டது..

  ReplyDelete
 2. அய்யா கால் தூசி,, நளினி கொன்றது ராஜிவை மட்டுமல்ல...அவரைச்சுற்றி இருந்த காவலர்கள், பொதுமக்கள் இன்னும் ஏராளமானோர்..அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா?
  நளினி என்ன அபலைப் பெண்ணை? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு கிடக்கையில் முருகனுடன் படுத்து குழந்தை பெற்றவள்..எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி இருப்பாள்? அவளுக்கு இன்னும் பல ஆண்டுகள் சிறையில் தள்ள வேண்டும்..
  தமிழ் தமிழ் என்று எல்லாக் குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்குவதே உங்களைப் போன்றோரது வேலையாகிவிட்டது..

  ReplyDelete
 3. மனித உரிமைப் பிரச்னையாகவே இதைப் பார்க்கிறேன். ராஜிவ் அரசின் அமைதிப் படை செய்த
  அத்துமீறல்களை அறிவீரா? அதனால் எத்தனை குழந்தைகள், எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்
  என்பது தெரியுமா? சீக்கியர்கள் படுகொலைக்கு ராஜீவால் நியாயம் கிடைத்ததா? ராஜீவ் கொலைக்குப் பின்னால்
  குழந்தை பெற்றதுதான் நளினியின் குற்றம் என்றால், காங்கிரஸ்காரர்கள் யாரும் அதற்குப் பின்
  படுக்கவே இல்லையா? குஜராத் கலவரத்துக்குக் காரணமான எல்லோரையும் இந்த அரசுகளால் தண்டிக்கமுடியுமா? தினகரன் அலுவலகம் எரிப்பில் இறந்த மூவரின் சாவுக்கு காரணமானவர்கள் யார் என்று
  உங்களுக்குத் தெரியாதா? அவர்களுக்கெல்லாம் தண்டனை கிடைக்கவில்லையே அதற்காக இப்படி
  உணர்ச்சிவயப்படுவீர்களா?

  நளினி விடுதலை ஆனால் ராயப்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு கெடும் என்கிற சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டிருக்கும் கலைஞர், அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்தது யாரைத் தெரியுமா? லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற தம் கட்சிக்காரர்களைத்தான். இதற்காக அழகிரியைப் பாராட்டி விடுதலை ஆனவர்கள் போஸ்டர்களை அடித்தது தெரியுமா உங்களுக்கு?

  என்னுடைய அந்தப் பதிவில் கூட சிறையில் இப்படி ஆண்டுகணக்கில் வாடும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் சேர்த்துதான் வேதனைப்பட்டிருக்கிறேன். ஆமாம் அய்யா நான் கால் தூசிதான்.. நல்லோர் கால் தூசி... ஆனால் மனித உரிமைகளை பறிக்க நினைக்கும் மனிதர்களுக்கு நான் போர் வாள். உங்களுக்கு நான் எப்படி என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் மரியாதைக்குரிய மர்ம யோகி அவர்களே...

  ReplyDelete